இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்?..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு

10/14/2019 4:40:07 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதை சீரமைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மேலும், வாரியத்தை நிர்வகிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நிர்வாகக் குழுவை அமைத்தது. லோதா குழு பரிந்துரைப்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு 23ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பிசிசிஐ உறுப்பினர்கள் அனைவரும் நேற்று மும்பையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் முறைசாரா கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த என்.நிவாசன், குஜராத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் படேலை தலைவர் பதவிக்கு முன்னிறுத்திய நிலையில், பல மாநில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. நீண்ட இழுபறிக்கு பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலியை, தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும் (தற்ேபாது குஜராத் சங்கத்துக்கு துணை தலைவராக உள்ளார்), முன்னாள் தலைவரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான அனுராக் தாகூரின் சகோதரருமான அருண் துமால் பொருளாளர் பதவிக்கும் முன்னிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த 3 முக்கியமான பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் என்றும், ஸ்ரீநிவாசன் முன்னிறுத்திய பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நேற்றுமுன்தினம் என்.சீனிவாசன், கங்குலி ஆகியோர் தனித்தனியாக சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மும்பையில் நடைபெற உள்ள பிசிசிஐ ஆண்டு கூட்டத்தில் தமிழ்நாடு, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 கிரிக்கெட் சங்கம் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]