இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

10/10/2025 2:52:32 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை: தண்டவாள பராமரிப்பு மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் காரணமாக நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 12க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் 4வது நடைமேடையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இங்கு 4வது நடைமேடையில் இருந்து தினமும் இரவு 7.50 மணிக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இயக்கப்படும்.

அதைப் போன்று மறுமார்க்கமாக இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் அதிகாலை 5.09 மணிக்கும், நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 5.53 மணிக்கும் தாம்பரம் ரயில்நிலையம் வந்தடையும். அங்கிருந்து பயணிகள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம். மேலும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாதது. காரணம் தண்டவாளம் முழுவதும் பிரிக்கப்பட்டு கான்கிரீட் தளம், கம்புகள் புதிதாக அமைக்கப்படுவதால் 4வது பிளாட்பாரத்தில் எந்த ரயில்களும் இயக்க முடியாத நிலை உள்ளது. இந்தகாரணத்தால் சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்புகள் குறைவு. எனவே பயணிகள் சிரமத்தை கவனத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு முறையான அறிவிப்பு செய்து வழக்கம் போல் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • தமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு



  • தமிழகத்தில் முதன் முறை கைத்தறி போர்வை விற்பனையை அதிகரிக்க நடமாடும் அரசு பஸ்



  • கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்



  • பிளஸ்2 மாணவி எரித்து கொலை தீ குளித்து வாலிபர் தற்கொலை



  • மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு



  • பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி



  • ஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்



  • 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு



  • உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]