இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜூவன்ஜோ துறைமுகம் முதல் தஞ்சை வரை: சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு

10/9/2025 2:35:39 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை: சீனாவின் ஜூவன்ஜோ துறைமுகம் முதல், தஞ்சை பெரிய கோயில் வரை சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு இருந்துள்ளதை கல்வெட்டுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனமாக தமிழர்கள் அறியப்பட்டாலும், வரலாற்று பின்னணியோடு வணிகம், கலாசாரம், பண்பாட்டு ரீதியில் பல்வேறு நாடுகளிலும் தங்களின் தடத்தை பதித்துள்ளனர். குறிப்பாக, சீனாவுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திலேயே வணிக ரீதியாக இருந்துள்ளது. சீனாவின் ஜூவன்ஜோ துறைமுகம், முந்தைய கடல்வழி பட்டுப்பாதையின் துவக்கமாக இருந்தது. கடல் பயணியர்களான மார்கோபோலோ (இத்தாலி), இபின் பதூதா (மொராக்கோ) ஆகியோரின் ஆய்வுகளில் ஜூவன்ஜோ துறைமுகம், உலகிலேயே அதிக வர்த்தகம் நடைபெற்ற இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் சொங் மற்றும் யுவான் வம்ச ஆட்சியின் போதுதான், சீனர்களுடனான தமிழர்களின் வணிகம் தொடங்கி உள்ளது. குறிப்பாக, 7 மற்றும் 8ம் நூற்றாண்டுகளில், பல்லவ மன்னன் சீனாவுக்கு சென்று அங்கு மிகப்பெரும் வணிகனாக உலா வந்துள்ளார். பின்னர், 9ம் நூற்றாண்டில் சீனாவுடன் வணிகம் சுணக்கம் ஏற்பட்டு, மீண்டும் 10ம் நூற்றாண்டின் பாதியில் சோழதேசத்து வணிகர்கள் மீண்டும் சீனர்களுடனான வணிகத்தைப் புதுப்பித்தனர். குறிப்பாக சோழ வம்சத்தின் ராஜராஜனின் அரசவை உறுப்பினர்கள், 1015ம் ஆண்டு சீனாவைச் சென்றடைந்ததாக ‘சுங் ஷி’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

சொங் வம்சத்தைச் சேர்ந்த ஜாவ் ஜு குவா என்பவரது எழுத்தாணி வரைந்த வரலாற்று ஓவியத்தின்படி, சோழ வம்சத்தில் ராஜராஜன் (1015), ராஜேந்திரன்-1 (1033), குலோத்துங்கன் (1077) ஆகியோர் ஆட்சியில் கற்றறிந்த 71 வணிகர்கள் சீனாவில் வணிகம் செய்துள்ளனர். அத்துடன், அவர்களுக்கு 81 ஆயிரத்து 800 செம்பு நாணயங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டதாக ‘சு குவா’வின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து அதிக அளவிலான தங்கம், வெள்ளி, ஈயம், தகரம், நாணயங்கள் ஆகியன பண்டமாற்று முறையில் கொண்டு வரப்பட்டன. இதனால் சீனாவில் இத்தகைய உலோகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவற்றுக்கு சீன அரசாங்கம் தடை விதித்தது. பின்னர் காகிதப் பணத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உலோகங்கள் சோழ வீதிகளில் புழங்கப்பட்டன. சோழர்கள் சீனர்களுடன் வணிகம் செய்ததற்கு அழியாச் சான்றாக இருக்கும் ஜுவன்ஜோவில் உள்ள கையுவான் புத்த கோவிலின் ஒருபகுதியில் பல இந்து கடவுள்களின் சிலைகளை காண முடிகிறது. 16 முகங்கள் கொண்ட 2 தூண்களின் 4 புறங்களிலும் இந்துக்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஜுவன்ஜோ கடற்பயண அருங்காட்சியகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பல இந்து கடவுள் சிலைகள் மற்றும் ஒப்பீட்டுப் படங்களுக்கு மத்தியில் வெளிர் மஞ்சள் நிற ஒளியில் தமிழ் கல்வெட்டு ஒன்றுள்ளது.

அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால், அதன் பொருள் சீன மொழியில் விளக்கமாக தரப்பட்டுள்ளது. 1281ல் அக்கல்வெட்டு சீன அரசருக்குப் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் விமானத்தில் 2வது தளத்தின் வடகிழக்கு மூளையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிலையானது மங்கோலியரின் உருவத்தை ஒத்துக் காணப்படுகிறது. மீசை, குறுந்தாடி, சீன கழுத்துப் பட்டையுடன் கூடிய அரைக்கைச் சட்டை ஆகியவை இவர் மங்கோலியர் அல்லது சீனராக இருக்க வாய்ப்புண்டு என்று ‘அமராவதி’ ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் நேரடிக் கண்காணிப்பில் தஞ்சைக் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவருடைய ஒப்புதலின் பேரிலேயே இச்சிலை அங்கு நிறுவப்பட்டிருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சோழருக்கும், சீனருக்கும் இடையேயான உறவுக்கு இது மிகச்சிறந்த சான்றாக உள்ளது என்றால் மிகையல்ல...!

மேலும் சில
  • கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை



  • காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு



  • அரியானா பாஜ கட்சி தேர்தல் பிரசாரம் சர்ச்சையில் சிக்கிய ‘டிக்டாக்’ சோனாலி



  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்



  • திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



  • 4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி



  • உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் இன்று யானைகள் அணிவகுக்கும் பிரமாண்ட ஊர்வலம்



  • ஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்



  • திருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி ; மாலை தங்கத்தேரோட்டம்



  • ‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு மத்திய பிரதேசத்தில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]