இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்

10/9/2025 2:31:41 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

புதுடெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும் என்று, மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக. 5ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 65 நாட்களாகியும் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை. அரசியல் தலைவர்கள் இன்னும் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மத்திய அரசு, அம்மாநில பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளது. மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர், காஷ்மீருக்கு பொருந்தக்கூடியதாக மாறியுள்ள மத்திய சட்டங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசின் சட்டங்களை அமல்படுத்துவது குறைவான அளவிலேயே இருந்தது. பொதுவாக மத்திய அரசின் திட்டங்கள் யாவும், காஷ்மீர் சட்டசபை, மத்திய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால்தான், அவற்றை அங்கு அமல்படுத்த முடியும். இதனால் பெரும்பாலான சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. எனவே, இந்த சட்டங்களால் கிடைக்கும் பலன்களை காஷ்மீர் மக்கள் அனுபவிக்க முடியவில்லை. மேலும், மத்திய அரசு நிதியின் பெரும்பகுதி, ஏழைகளை சென்றடையவில்லை.

தற்போது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதால், ஊழலுக்கு எதிரான அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும். 106 மத்திய அரசு சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கு பொருந்தும். தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம், கல்வி உரிமை சட்டம், பெற்றோர் பராமரிப்பு - நலவாழ்வு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பலனளிக்கும் சட்டங்கள், ஊழலை காட்டிக்கொடுப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் போன்ற சட்டங்கள் இனிமேல் காஷ்மீருக்கு பொருந்தும். மேற்கண்ட சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும்போது, அனைவருக்குமான கல்வித்தரம் உயரும். குறிப்பாக, ஏழைக் குழந்தைகளிடம் கல்வி சென்றடையும். கல்வி, தொழில் வளம், சுற்றுலா ஆகியன வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை



  • காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு



  • அரியானா பாஜ கட்சி தேர்தல் பிரசாரம் சர்ச்சையில் சிக்கிய ‘டிக்டாக்’ சோனாலி



  • ஜூவன்ஜோ துறைமுகம் முதல் தஞ்சை வரை: சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு



  • திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



  • 4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி



  • உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் இன்று யானைகள் அணிவகுக்கும் பிரமாண்ட ஊர்வலம்



  • ஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்



  • திருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி ; மாலை தங்கத்தேரோட்டம்



  • ‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு மத்திய பிரதேசத்தில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]