இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பால் விலை உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்பு கட்டணம் கடும் உயர்வு; தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு

10/5/2025 2:44:46 PM
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு : இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி : கோயம்பேட்டிலிருந்து இன்று 2,990 பஸ்கள் இயக்கம்

சென்னை-பால் விலை உயர்வை தொடர்ந்து, தமிழக அரசு புதிய மின்இணைப்புக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் புதிய தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று, தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின்சார வாரியம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில், பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய புதிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்காக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் சார்பாக மனுவும் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அறிவிப்புகள் வெளியிட்டு, கடந்த 25ம் தேதி சென்னை தி.நகரில் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பொதுமக்கள், விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் ஓய்வு பெற்ற மின்வாரியத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது கருத்துகளையும் எடுத்து கூறினர். இதனை கேட்ட, மின்வாரிய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசித்து முடிவுகளை அறிவிப்பதாக கூறி, மனுக்களை பெற்றுக்கொண்டு சென்றனர். இந்தநிலையில் புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:எல்.டி சர்வீஸ்(தாழ்வு அழுத்த மின் இணைப்பு) விட்டிற்கு சிங்கிள் பேஸ் இணைப்பு பெறுவதற்கு ரூ.250 செலுத்தப்பட்டு வந்தது, தற்போது ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 பேஸ் இணைப்புக்கு ரூ.500 கட்டணம் வசூலித்து வந்தனர். தற்போது ரூ.750 முதல் 1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொது குடிநீர் இணைப்பு, பொது பயண்பாட்டுக்கான விளக்குகளுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது, தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் 3 பேஸ் இணைப்பு பெற கட்டணம் ரூ.500 ஆக இருந்தது, இது தற்போது ரூ.750 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் வழிபாட்டு தளங்கள், கைத்தறி தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கான புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மீட்டர் போர்டு, எல்டிசிடி பாக்ஸ், ஹெச்டி பாக்ஸ் மாற்றம் செய்வதற்கான கட்டணம் என பல்வேறு விதமான கட்டணங்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே பஸ் கட்டணம், பால் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

ஜிஎஸ்டியால் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு, பல நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. கைத்தறி தொழில் முழுமையாக முடங்கியுள்ளன. தற்போது மின் இணைப்பு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:புதிய இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, மின்வாரியம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது தேவையற்ற ஒன்றாகும். கட்டண உயர்வால்,  சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கருத்துக்கேட்பு கூட்டம் பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்பட்டது. சிறு, குறு தொழில் செய்து வருவோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் சில
  • உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு : இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு



  • ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி : கோயம்பேட்டிலிருந்து இன்று 2,990 பஸ்கள் இயக்கம்



  • விக்கிரவாண்டி, நாங்குநேரியையும் சேர்த்து 3 தொகுதிகளில் திமுக வெற்றி செய்தி : மு.க.ஸ்டாலின் உறுதி



  • 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை ‘ஆம்னி’ பஸ்களில் கட்டணம் கடும் உயர்வு ; போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழு



  • பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை எதிரொலி: இபிஎஸ், ஓபிஎஸ் 10 மாவட்ட செயலாளருடன் ஆலோசனை..சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு



  • அஜினமோட்டோவுக்கு தமிழகத்தில் தடை: அமைச்சர் கருப்பணன் அறிவிப்பு



  • தமிழகத்தில் முதுகெலும்பில்லாத ஆட்சி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு



  • திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 4ம் நாள்: கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி



  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி கோயிலை தமிழக அரசு ஏற்று நடத்தும்: அமைச்சர் கருப்பணன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]