இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தீவிரவாதத்தின் மையப்புள்ளி பாக்.: மத்திய வெளியுறவு செயலர் குற்றச்சாட்டு

9/11/2025 2:47:46 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

ஜெனிவா: சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தில், தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் விளங்குவதாக, மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவிப்பை வௌியிட்டது. இதனை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறி, பல்வேறு அடக்குமுறைகளை மத்திய அரசு கையாளுவதாகவும், மனித உரிமைகள் அங்கு மீறப்படுவதாகவும், அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல நாடுகளின் உதவியை நாடிய நிலையிலும், அது எதுவும் பயனளிக்கவில்ைல. இதற்கிடையே இதுகுறித்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று பொது விவாதம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசும்போது, ‘‘ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம், இந்த பூமி மண்டலத்தின் மிகப்பெரிய திறந்தவெளி சிறையாக அந்த மாநிலத்தை இந்திய அரசு மாற்றி வருகிறது. அந்த அளவுக்கு அங்கு மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை செயலர் (கிழக்கு) விஜய் தாக்கூர் சிங் பேசுகையில், ‘‘ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370வது சட்டப்பிரிவை நீக்கியது முற்றிலும் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கை. இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் தடையிட பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுபவர்கள் அதற்கான உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும். உலக அளவில் இன்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் விளங்குகிறது. எல்லைத் தாண்டிய தீவிரவாத செயல்களின் மூலம் அந்நாடு, இந்தியாவுடன் மாற்று ராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது’’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]