இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளராக நான் ஏன் மீண்டும் தேர்வானேன்?.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்

9/10/2025 3:54:20 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் மீண்டும் அவர்களின் பொறுப்பை தொடர்கின்றனர். ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்ஜய் பங்கர் நீக்கப்பட்டு, விக்ரம் ரத்தோர் புதிய ‘பேட்டிங்’ பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில், மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட பயிற்சியாளர்களின் சம்பளம் உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முறை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ரவிசாஸ்திரிக்கு, ஆண்டுக்கு ரூ.8 கோடி வழங்கப்பட்டது. தற்போது இவருக்கு 20 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.9.5 கோடி முதல் ரூ.10 கோடிக்குள் ஆண்டு சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஸ்ரீதர், பரத் அருணுக்கு தலா ரூ.3.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருக்கு ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடியும் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ஒப்பந்தம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இரண்டாவது முறையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் ரவி சாஸ்திரி கூறுகையில், ‘‘நான் மீண்டும் அணியின் பயிற்சியாளராக இங்கு வந்ததன் காரணம், இந்திய அணியின் மீதுள்ள நம்பிக்கைதான். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மாற்றத்தை பார்ப்பீர்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக இளம் வீரர்கள் வரவுள்ளனர். இந்த உலகில் யாரும் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. அனைவரும் தவறில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்ள முடியும்’’ என்றார்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]