இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சக மாணவர் வெறிச்செயல்

9/10/2025 3:41:41 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

சிதம்பரம்: காதல் பிரச்னையில் கல்லூரி மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கதிராமங்கலத்தை சேர்ந்தவரின் மகள் (19), கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று வந்தார். குத்தாலம் தாலுகாவை சேர்ந்த சங்கர் மகன் முத்தமிழன் (22) என்பவரும் இதே பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மாணவி வேறொருவருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

நேற்று மாலை மாணவியும், முத்தமிழனும் பல்கலைக்கழக வளாகத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்தமிழன், மாணவியிடம் வேறொருவருடன் பேசி வருவது தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, ‘இனி உன்னை காதலிக்க போவதில்லை’ எனக் கூறியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்தமிழன், ஆசிட்டை வாங்கி வந்து, மாணவி மீது வீசியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி, அலறி துடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். ஆசிட் வீச்சு சம்பவத்தை பார்த்ததும், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு முத்தமிழனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இதனால் அவரும் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அண்ணாமலைநகர் போலீசார், மாணவர் முத்தமிழனை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]