இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி

8/28/2019 4:57:03 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

பாரிஸ்: பிரான்சில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பும் உடனிருந்தார். இந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்ட விதம்தான், இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கனடா பிரதமர் ட்ரூடோவைப் பார்க்கும் டிரம்ப் மனைவி மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.
இந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியா கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு ‘ஏர் கிஸ்’ கொடுப்பது போன்ற முகபாவனை அமைந்திருக்கும். அப்போது, டிரம்பின்  ரியாக்‌ஷன்தான் இப்போது புகைப்படம் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன. ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் கிளிக் செய்யப்பட்ட படம்தான் தற்போதைய வைரலாக உள்ளது.

இதேபோல், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரன் மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இடையில் உரசல் போக்கு திடீரென அதிகரித்துள்ளது. போல்சனாரோ, மாக்ரனின் மனைவியை ஒரு இடத்தில் கேலி செய்ய, அதற்காக பிரான்ஸ் அதிபர் கடும் கோபத்தில் உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மாக்ரன், “பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேசப் பிரச்னையாகும். ஜி-7 மாநாட்டில் அது தலையாயப் பிரச்னையாகக் கருதி விவாதிக்கப்பட வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார். அதற்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, “காலனி ஆதிக்க மனோபாவத்தைத்தான் இது காட்டுகிறது” என உஷ்ணமானார். இதற்கிடையே பேஸ்புக் பக்கத்தில் ஒருவர், ‘இப்போது புரிகிறதா… ஏன் போல்சனாரோவை, மாக்ரன் வம்புக்கு இழுக்கிறார் என்று..?” என்று கூறி பதிவிட்டார். அதனுடன், மாக்ரனின் 66 வயது மனைவியான பிரிகிட் மாக்ரனின் படத்தையும் போல்சனாரோவின் இளவயது மனைவியின் படத்தையும் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டில் போல்சனாரோ, “அவரை அசிங்கப்படுத்தாதீர்கள், ஹ... ஹா...” என கமென்ட் பதிவிட்டிருந்தார்.

இதனால் கடும் கோபத்துக்கு ஆளான மாக்ரன், “என் மனைவி குறித்து மிகவும் கீழ்த்தரமான கமென்ட்களை சொல்லியிருக்கிறார் அந்த நபர். இது மிகவும் வருத்தமாகும். குறிப்பாக பிரேசிலின் குடிமக்களுக்கு. தங்கள் நாட்டு அதிபர் இப்படி கீழ்த்தரமான ஒரு விஷயத்தை செய்துள்ளாரே என்று அந்நாட்டுப் பெண்கள் அவமானப்படுவார்கள் என்றே நினைக்கிறேன். பிரேசில் நாட்டு மக்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். அவர்களும், இதைப் பார்த்து அவமானப்படுவார்கள்” என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இதற்கிடையே, அமேசான் காட்டுத் தீ விவகாரத்திலும் பிரேசில் அதிபர் போல்சனாரோ, “அமேசான் விவகாரத்தில் ஆர்வம் கொண்டிருப்பது போன்று அதிபர் மாக்ரன் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மாக்ரனின் காலனி அல்ல. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மரியாதை கொடுத்து அவர் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]