இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

80 லட்சம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற எதற்கும் தயாராக இருக்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்

8/27/2019 4:42:33 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தினரின் அடக்குமுறைகளில் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற எந்தவிதமான நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஜி-7 மாநாட்டின் போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய மூன்றாம் நபர் தேவையில்லை’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், இந்திய பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு மக்களுக்கு டிவி மூலம் உரையாற்றினார். அப்ேபாது, பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது: காஷ்மீரில் தவித்துக்கொண்டிருக்கும் 80 லட்சம் காஷ்மீரி மக்களுக்காக நான் எப்போதும் துணைநிற்பேன். காஷ்மீரின் சுயாட்சியை நீக்கியுள்ளதன் மூலம், இந்திய பிரதமர் மோடி வரலாற்று பிழையை நிகழ்த்திவிட்டார். இந்திய அரசு, காஷ்மீர் பகுதியில் அதிகளவில் படைகளை குவித்துவருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு, காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி, மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியா, ஐ.நா விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த விவகாரத்தில், யார் நமக்கு துணை நிற்கிறார்களோ இல்லையோ, காஷ்மீரில் தவித்து வரும் 80 லட்சம் காஷ்மீரி மக்களுக்காக பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும். இந்திய ராணுவத்தினரின் அடக்குமுறைகளில் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற எந்தவிதமான நடவடிக்கைக்கும் தயாராக இருக்கிறோம். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட பலதடவை நாங்கள் முயற்சித்தோம். முடியாமல் போனதற்குக் காரணம் அந்நேரம் இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருந்தது. புல்வாமா தாக்குதல் வேறு நடந்துவிட்டது. அதைவைத்து, பாகிஸ்தானை நோக்கி கைகாட்டியது இந்தியா. கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்த்துவிட பல வழிகளிலும் முயற்சித்தது இந்தியா. இச்செயலின் மூலம், பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் கொள்கை என்னவென்பதை எங்களால் அறிய முடிந்தது.

ஆர்எஸ்எஸ் கொள்கைதான் பாஜவுக்கும். அந்தக் கொள்கையின்படி பார்த்தால், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமான நாடு. வரும் செப்டம்பர் 27ம் தேதி, ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து உலகநாடுகளிடையே உரை நிகழ்த்துவேன். இந்த விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நேற்று நிகழ்ந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிவியில் தோன்றி பேசியுள்ளார். எப்படி இருந்தாலும், காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுக்கு கிலி ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]