இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இமாச்சல்பிரதேச வெள்ளத்தில் சிக்கி தப்பிய நடிகை மஞ்சுவாரியர் கேரளா திரும்புகிறார்

8/21/2019 4:51:28 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

திருவனந்தபுரம்: இமாச்சல பிரதேசத்தில் படப்பிடிப்புக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று நாடு திரும்புகிறார். மலையாள திரைப்படத்தின் பிரபல இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவர் தற்போது ‘கயற்றம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவை சேர்ந்தவர்கள் 30 பேர் இமாச்சல பிரதேசம் சென்றனர். மணாலியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த 12ம் தேதி அங்கிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பிறகுதான் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. கனமழை, நிலச்சரிவு காரணமாக சாலைகள் முழுவதும் சேதமடைந்தன. இன்டர்நெட், போன் வசதி உள்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர், சுற்றுலா பயணிகள் குறித்து எந்த விபரமும் வெளியுலகத்துக்கு தெரியாமல் போய்விட்டது.

நேற்று முன்தினம் இரவு நடிகை மஞ்சு வாரியார் சாட்டிலைட் போன் மூலம் கொச்சியில் உள்ள அவரது தம்பி மது வாரியாரை அழைத்து விபரத்தை கூறினார். அதன் பிறகுதான் படிப்பிடிப்பு குழுவினர், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அங்கு சிக்கி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மது வாரியர் மத்திய இணை அமைச்சர் முரளிதரனை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார்.

உடனடியாக இமாச்சல பிரதேச முதல்வர் ஜெயராம் தாக்கூரை அழைத்து வெள்ளம் பாதித்த பகுதியில் சிக்கியுள்ள நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மணாலியில் இருந்து மீட்புப்படையினர் சத்ரு பகுதிக்கு விரைந்து சென்றனர். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் அனைவருக்கும் உணவு பொருட்களும் ெகாண்டு செல்லப்பட்டன. பின்னர் அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. இதற்கிடையே சத்ரு சாலைகளும் சீரமைக்கப்பட்டன. ஆனால் இன்னும் ஒருநாள் படப்பிடிப்பு நடத்த உள்ளதால் அது முடிந்த பின்னர் இன்று திரும்புவதாக இயக்குநர் தெரிவித்தார். இதையடுத்து மற்ற சுற்றுலா பயணிகள் அனைவரையும் மீட்புப்படையினர் மீட்டு பத்திரமான இடத்துக்கு அழைத்து சென்றனர். நடிகை மஞ்சு வாரியர் உள்பட படக்குழுவினர் இன்று அல்லது நாளை கேரளாவுக்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]