இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

வீரர்களுக்கான விருதுகள் அதிகாரபூர்வ அறிவிப்பு: தமிழக வீரர் உட்பட 32 சாதனையாளர்கள் யார்?....வரும் 29ம் தேதி விழாவில் ஜனாதிபதி கவுரவிக்கிறார்

8/21/2019 4:38:53 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதுடெல்லி:  நாடு முழுவதும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, அற்புதமான மற்றும் மிகச்சிறந்த செயல்திறனுக்காக வழங்கப்படுகிறது; அர்ஜூனா விருது தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்படுகிறது; பதக்கங்களை வெல்ல வழிகாட்டும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு (2019) மேற்கண்ட விருதுகளுக்கு ஏராளமான பரிந்துரைகள் பெறப்பட்டன. அந்த பட்டியலை முன்னாள் அர்ஜூனா விருது பெற்றவர்கள், துரோணாச்சார்யா விருது பெற்றவர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள், நிபுணர்கள்,  வர்ணனையாளர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகள் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுக்களால் பரிசீலிக்கப்பட்டன.  விருதுகளுக்கான தேர்வுக் குழு உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையில் நடைபெற்றது.

தற்போது, விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 29ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 19 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். கேல்ரத்னா விருதுக்கு ரூ.7.50 லட்சமும், மற்ற விருதுகளுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அர்ஜூனா விருது பெறுவது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் (உடற்கட்டு) பாஸ்கரன் கூறுகையில், ‘‘நான் உலக மற்றும் ஆசிய அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பட்டம் வென்று இருக்கிறேன். மத்திய அரசு, பாடி பில்டிங்கை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது 20 ஆண்டு கால கஷ்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த விருது இளைஞர்களுக்கு இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்கம் அளிப்பதாக இருக்கும்’’ என்றார்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]