இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

8/21/2019 3:43:24 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி தவணை காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தவணை காலத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 177 டிஎம்சி தமிழகத்திற்கு கர்நாடகா அரசு தர வேண்டும். இந்த நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி இந்தாண்டுக்கான தவணைகாலம் தொடங்கியது. இந்த தவணை காலத்தில் ஒப்பந்தப்படி ஜூனில் 9.19 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், 2.06 டிஎம்சி மட்டுமே கர்நாடகா தந்தது. இதையடுத்து காவிரி ஆணையம், ஒப்பந்தப்படி கர்நாடகா தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் கடந்த ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியில் 7.94 டிஎம்சி மட்டுமே தந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக, 49 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 சதவீதம், 19 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 99 சதவீதம், 8.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஹாரங்கி அணையில் 95 சதவீதம், 37 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் 98 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 86 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை 26.68 டிஎம்சி தர வேண்டும் என்ற நிலையில், 74.68 டிஎம்சி நீர் கர்நாடகா தமிழகத்திற்கு தந்துள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 67.11 டிஎம்சியில் 84.18 டிஎம்சி கொடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த 3 மாதத்தில் 17.07 டிஎம்சி நீர் கூடுதலாக தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கர்நாடகா இந்த மாதத்தில் திறந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]