இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: 4,000 பேர் சிறையில் அடைப்பு?

8/19/2019 2:49:26 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

2 ஆண்டு வரை வெளியே வரமுடியாத வழக்கில் கைது
சிறைகள் நிரம்பி வழிவதாக செய்தி நிறுவனம் தகவல்
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இன்று திறப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு முன்னதாக, 4,000 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், கைதானவர்கள் 2 ஆண்டுகள் வரை வெளியே வரமுடியாத பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முதல் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், 1956ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால், வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், காஷ்மீரின் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பின்னரே அங்கு அமலாகும். இவ்வாறு இருக்க, கடந்த 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

மேலும், ஜம்மு - காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு, லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு - காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் ஜம்மு - காஷ்மீரில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 144 தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக சில இடங்களில் தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன.இதுகுறித்து, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறுகையில், ‘‘ஸ்ரீநகரில் 190க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரிகளும், அரசு அலுவலகங்களும் முழு அளவில் இயங்க துவங்கி உள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களில் அமைதி நிலவுகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது’’ என்றார். நேற்று கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டதால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. தொலைத் தொடர்பு ஊழியர்கள் இரவு பகலாக தொடர்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றர்.

ஆயினும் திடீரென நேற்று மாலை முதல் ஜம்முவின் சில பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏஎப்பி என்ற பிரான்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த 5ம் தேதி ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான அறிவிப்புக்கு முன்பும், பின்பும் பிஎஸ்ஏ எனப்படும் பொது பாதுகாப்பு சட்டப்படி 4,000 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை வைக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது, 2 ஆண்டுகள் வரை விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம். இவர்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், சிறை நிரம்பி உள்ளது. கைது விவரங்களை, அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. மாஜிஸ்திரேட் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கைது விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இவர்களில், 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பிரிவினைவாதிகளும் அடங்குவர். ஸ்ரீநகரில் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களில், சுமார் 6,000 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் முதலில் ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் ராணுவ விமானம் மூலம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சிலர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]