இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

போலீசுடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

8/17/2019 2:06:37 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மயிலாடுதுறை: போலீஸ்காரருடன் லாட்ஜில் தங்கிய மயிலாடுதுறை ஆசிரியை தூக்கு மாட்டி தற்ெகாலை செய்து கொண்டது பற்றி பரபரப்பு தகவல்கள் ெவளியாகி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் மகாராஜபுரத்தை சேர்ந்த ஜெயபால் மகள் சித்ரா (30). பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சிறுபுலியூர் துரைசாமி மகன் ராஜ்குமார்(32). இவர் திருச்சியில் உள்ள நம்பர் 1 தமிழ்நாடு சிறப்பு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இருவருக்கும் இருதரப்பு பெற்றோரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் செப்டம்பர் 16ம் தேதி கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே ராஜ்குமாரும், சித்ராவும் செல்போனில் அடிக்கடி பேசினர். பெண் வீட்டிற்கு ராஜ்குமார் வருவதும், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும் வாடிக்கையாக இருந்தது. இதை பெற்றோர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக.15) ராஜ்குமார், சித்ராவை அழைத்து கொண்டு தான் வேலைபார்க்கும் திருச்சிக்கு கிளம்பினார். அங்கு கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். காலை 9.30 மணியளவில் ராஜ்குமார் மட்டும் வெளியே கிளம்பி சென்றார். மீண்டும் 10.20 மணியளவில் போன் செய்த போது சித்ரா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார் ஓட்டலுக்கு வந்து பார்த்த போது, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் கதவை உடைத்து பார்த்த போது, சித்ரா தூக்கு மாட்டி சடலமாக தொங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், சடலத்தை இறக்கி ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சித்ராவின் ஊரான செம்பனார்கோவில் மகாராஜபுரத்துக்கு கொண்டு வந்தார். அங்கு சித்ராவின் சடலத்தை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜ்குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘சித்ரா ஏற்கனவே ஒருவரிடம் பழகி இருப்பதாக ராஜ்குமாருக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் பலமுறை தகராறு நடந்துள்ளது.

அதேபோல் திருமண ஏற்பாடுகளை கவனிக்காமலும், தோழிகளுக்கு பத்திரிகை கொடுக்காமலும் சித்ரா இருந்துள்ளார். இதை தாய் கண்டித்ததால், அவருடன் கோபித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இது தெரிந்ததும் சித்ராவை, செல்போனில் தொடர்பு கொண்டு ராஜ்குமார் சமாதானம் பேசி உள்ளார். பின்னர் அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் தான் சித்ரா தற்கொலை செய்துள்ளார். எனினும் திருச்சி போலீசார் வந்து விசாரித்த பிறகு தான் தற்கொலைக்கான முழு காரணமும் தெரியவரும்’’ என்றனர்.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]