இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முதல்வர் திறந்துவைத்து 50வது நாளில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் தரைத்தளம் உடைந்து கடலில் விழுந்தது

8/14/2019 4:32:00 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

சேதுபாவாசத்திரம்: மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் தரைத்தளம் உடைந்து கடலில் விழுந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பழைய மீன்பிடி துறைமுகத்தை இடித்து அப்புறபடுத்தி விட்டு ரூ60 கோடியில் புதிய துறைமுகம் கட்டப்பட்டது. 950 மீட்டரில் 2 படகு அணையும் துறை, படகு பழுது பார்க்கும் தளம், நிர்வாக அலுவலக கட்டிடம், 2 மீன் ஏலக்கூடங்கள், 2 வலை பின்னும் கூடங்கள், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், வாகன போக்குவரத்துக்காக சிமென்ட் சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், படகு இறங்குதளம் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா கண்ட 50வது நாளான நேற்று துறைமுகத்தில் வாகனங்கள் வந்து செல்லும் தரைத்தளத்தின் ஒரு பகுதி இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதை ஒப்பந்ததாரர்கள் அவசர அவசரமாக செப்பனிட்டு வருகின்றனர். இதுகுறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் கூறும்போது, ‘‘மல்லிப்பட்டினத்தில் ஒன்றரை மாதத்திற்கு முன் தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட துறைமுகம் தரமற்ற முறையில் கட்டப்பட்டடுள்ளதை மீனவர் சங்கம் பல முறை அறிவுறுத்தியும் நிலையை மாற்றாமல் கட்டினர். தற்போது தரைத்தளத்தின் ஒரு பகுதி இடிந்து  கடலில் விழுந்துவிட்டது. இதை அவசர அவசரமாக சரி செய்கின்றனர். படகு ஏற்றி இறக்கும் தளமும் பயன்படாமல் இருந்து வருகிறது. உலக வங்கி நிதியுதவியுடன் கட்டி தரப்பட்ட துறைமுகம், தரம் குன்றி மழையோ, அலை கடல் சீற்றமோ இல்லாத நிலையில் இடிந்து விழுந்து விட்டது. இதற்கு யார் பொறுப்பு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மழைக்கு முன்பாக துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்’ என்றார்.

மேலும் சில
  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



  • தமிழக அரசு ரூ.68 கோடி இழப்பீடு வழங்கியதன் மூலம் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது; 4.4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளியும் அடங்கும்



  • சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளரின் தாயாருக்கும் கொரோனா என தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]