பஸ்சில் அமர்ந்திருந்த முதியவரிடம் செல்போன் பறிப்பு
8/8/2025 2:51:44 PM
அண்ணாநகர்: சென்னை முகப்பேர் மலர் காலனி 19வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (67). இவர் நேற்று மாலை பாரிமுனை செல்வதற்காக அண்ணாநகரில் இருந்து பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுத்துவிட்டு அமர்ந்ததும் தனது செல்போனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பதற்றம் அடைந்த அவர் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்ைல.
இதையடுத்து சுப்பிரமணி, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபற்றி மக்கள் கூறுகையில், ‘’ அண்ணாநகர் பஸ் டிப்போவில் பிக்பாக்கெட், வழிப்பறி கும்பல் அதிகமாக சுற்றுகின்றனர். எனவே, போலீசார் ரோந்துவந்து கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.