இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘கொலை குற்றமா செய்து விட்டேன்’ முதல்வர் மீது மணிகண்டன் குற்றச்சாட்டு: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ஆவேசம்

8/8/2025 2:04:19 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மதுரை: ‘நான் என்ன கொலை குற்றமா செய்து விட்டேன்’ என அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் ஆவேசமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் மணிகண்டனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி கவர்னர் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும், மணிகண்டனுக்கும் மோதல் ஏற்பட்டதால்தான், அவரது பதவி பறிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது குறித்து ராதாகிருஷ்ணன் மீது அவர் குற்றசாட்டு தெரிவித்த சில மணி நேரங்களில் அவரது பதவி பறிக்கப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது: நான் அதிமுகவிற்கு உண்மையாக உழைத்திருக்கிறேன். ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கிறேன். அமைச்சர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டது நேற்றிரவு 9.45 மணிக்குத்தான் தெரிந்தது. அப்போது நான் ராமநாதபுரத்தில் இருந்தேன். இங்கு கூட்டுறவு வங்கி தேர்தல் தொடர்பாக பிரச்னை இருந்ததால், அதை முடித்து கொடுத்து விட்டு இரவோடு இரவாக சென்னை புறப்பட்டு வந்தேன்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்து விட்டேன்? எனது பேட்டி தொடர்பாக என்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. நான் கடுமையாக உழைத்ததால்தான் பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்க முடிந்தது. எம்.பி தேர்தலுக்கும் தீவிர பிரசாரம் செய்தேன். தமிழகம் முழுவதும் அதிமுக தோற்றதால் இங்கும் தோற்றது. என்னை நீக்கியது மனவேதனை அளிக்கிறது.

எனது தந்தை காலத்திலிருந்தே அதிமுகவிற்காக உழைத்து கொண்டிருக்கிறேன். 1987ம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினரானேன். எனது தந்தை 1972ம் ஆண்டு முதலே அதிமுகவில் உள்ளார்.  எனது தாத்தா 1957ம் ஆண்டில் இருந்தே திமுக உறுப்பினர். எங்களது குடும்பமே அரசியல் குடும்பம்தான். எனது பேட்டி குறித்து முதல்வர், என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சத்துணவில் காலை உணவு கொடுக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது என்று ஓராண்டுக்கு முன்பு பேசினேன். சிறிது நேரத்தில் என்னை போனில் தொடர்பு கொண்ட முதல்வர், அப்படி பேசக்கூடாது, ஜெயலலிதா இருக்கும் போதே அதிக செலவாகும் என்பதால் காலை உணவு திட்டம் வேண்டாம் என கைவிடப்பட்டது என்று தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோமே என்றேன். அதற்கு அவர், இது பற்றி பேசாதீர்கள், விட்டுவிடுங்கள் என்றார்.

அதே போல் தற்போது, எதற்காக இப்படி பேசினீர்கள் என்று கேட்டிருக்கலாம். அமைச்சர் பதவியில் இருந்து நீக்க, நான் என்ன கொலை குற்றமா செய்து விட்டேன்? இல்லை கொள்ளையடித்து விட்டேனா? கஞ்சா, குட்கா, பான்பராக் விற்றேனா? கட்சியை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன். முதல்வரை சந்தித்து எனது தரப்பு நியாயத்தை விளக்குவேன். என்னை நீக்கியது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அனைத்து அமைச்சர்களும் வருத்தத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மணிகண்டன் திடீர் குற்றச்சாட்டு தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும், அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படவில்லை.

அவர் தொடர்ந்து மாவட்ட செயலாளராக உள்ளார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது முதல்வர் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ள மணிகண்டன், போர்க்கொடி தூக்குவாரா இல்லை அடங்கிப்போவாரா என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]