இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இந்து அறநிலையத் துறையில் 44 ஆய்வாளர்கள் இட மாற்றம்: ஆணையர் நடவடிக்கை

7/22/2019 4:31:45 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நெல்லை: இந்து சமய அறநிலையத்துறையில் 44 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  அறநிலையத்துறையில் சமீபத்தில் கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்களில் தகுதியுடைய சிலருக்கு இடமாறுதல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆய்வர் நிலையிலான இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கடலூர் தலைமை எழுத்தர் சாந்தி விழுப்புரம் உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தராகவும் திருவண்ணாமலை தலைமை எழுத்தர் ஜெயந்தி அதே பகுதியில் ஆய்வாளராகவும், திருவண்ணாமலை ஆய்வர் தேவராஜ் திட்டக்குடி ஆய்வராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை வடக்கு ஆய்வர் சுந்தரி மதுரை சுந்தரேஸ்வரர் கோயில் அயற்பணி ஆய்வராகவும் மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆய்வர் வட்டம் 6 கலைச்செல்வி கும்மிடிப்பூண்டி ஆய்வராகவும், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் அயல் பணி ஆய்வர் கோவிந்தசாமி ஈரோடு உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தராகவும், கிருஷ்ணகிரி ஆய்வர் சந்தியா லால்குடி ஆய்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதுபோல் நாகர்கோவில் கிழக்கு ஆய்வர் ஆனந்த், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அயற்பணி ஆய்வாளராகவும், கோவை மேற்கு ஆய்வர் சேகர் பழனி தண்டாயுதபாணி கோயில் அயற்பணி ஆய்வாளராகவும், சென்னை வட்டம் 2 ஆய்வர் வாசுகி திருவள்ளூர் ஆய்வாளராகவும், நெல்லை உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் ரோகிணி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் அயற்பணி ஆய்வாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 44 ஆய்வாளர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுநலன் மற்றும் நிர்வாக நலன் கருதி இந்த மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாறுதல் செய்யப்பட்ட ஆய்வர்களை தக்க மாற்று ஏற்பாடுகள் செய்து உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க தொடர்புடைய சார்நிலை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]