இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

7/11/2025 3:25:41 PM
அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் புனரமைக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. கருட பகவான் ஆஞ்சநேயர் சன்னதிகளுடன் விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பகவத்ப்ராத்தனை, அக்னி பிரதிஷ்டை, மகாபூர்ணாஹூதி, முதல் கால ஹோமம், ஆராதனை நடந்தது. நேற்று 2ம் கால மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தன. மாலை 4 மணியளவில் 3ம் கால மகா ஹோமம், யந்திரஸ்தாபனம், பிம்பவாஸ்து உட்பட பூஜைகள் நடந்தன.

இன்று அதிகாலை 5 மணியளவில் விஸ்வரூப தரிசனம், விசேஷ ஹோமம், மகா பூர்ணாஹூதி, கும்ப புறப்பாடு நடந்தது. இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை காண திரண்டிருந்த மக்கள், பக்தி பரவசத்துடன், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று முழக்கமிட்டனர். நிகழ்ச்சியில் கைங்கர்ய சபா சங்க உறுப்பினர்கள் ஏ.பிரகாசம், பூதூர் ரங்கநாதன், கமாண்டோ ஏ.பாஸ்கரன், பொன்.பாண்டியன், பி.வி.எஸ்.சண்முகம், எஸ்.பி.பி.ராஜா, எஸ்.குணசேகரன், டி.ஆர்.எஸ்.சந்துரு, வக்கீல் இ.ஜெகதீசன், மன்னார் மற்றும் 32 சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு 7 மணியளவில் சேஷ வாகனத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கைங்கர்ய சபா சங்கம் செய்திருந்தது.

மேலும் சில
  • மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி



  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவு: கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனையில் முடிவு



  • சட்ட விரோதமாக கடத்தல்: 14 கோயில் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா: தமிழக கோயில் சிலைகளும் மீட்பு



  • அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: சசிகலாவுக்கு ஓபிஎஸ் பதிலடி



  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடியில் இபிஎஸ், தேனியில் ஓபிஎஸ் பங்கேற்பு



  • 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசு தலைவர் தமிழகம் வருகை: சட்டப்பேரவை வளாகத்தில் மாலை 5 மணிக்கு கலைஞர் படத்தை திறந்து வைக்கிறார்



  • முன்னாள் முதல்வர்களான இபிஎஸ்- ஓபிஎஸ்சை பிரதமர் மோடி காக்க வைத்தாரா?.. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம்



  • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அவசர ஆலோசனை



  • புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்



  • 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]