இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உலக கோப்பை போட்டி தோல்விக்காக பதவியில் இருந்து விலக முடியாது! பாக். கேப்டன் திட்டவட்டம்

7/8/2025 3:38:02 PM
அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கராச்சி:  ‘பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் இல்லை’ என பாகிஸ்தான் அணியின் கேப்டனான சர்பராஸ் அஹமது தெரிவித்தார். உலக கோப்பை லீக் தொடரில் 5 வெற்றி மற்றும் நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளையும் பெற்றும் கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. புள்ளி பட்டியலில் ‘நெட் ரன்ரேட்’ குறைவாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான படுதோல்வி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகள் என்று தொடர் தோல்விகளுக்கு பிறகு வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தியது. தொடரின் முதற்பாதியில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி, பின்னர் அதிலிருந்து மீண்டெழுந்து பிற்பாதியில் சிறப்பாக ஆடியது.

இதில், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தலைமையிலான அணி மற்றும் அவரது ‘பிட்னெஸ்’ ஆகியவை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தி அணியை தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெறும் அளவிற்கு சர்பராஸ் செயல்பட்டார்.

இந்நிலையில், உலக கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி, நாடு திரும்பியது. கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்பராஸ் அகமது, ‘‘தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகமாட்டேன். ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எனது ஆட்டம் எனக்கு திருப்திகரமாக உள்ளது. கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே முடிவு செய்யட்டும். இங்கிலாந்துடன் இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிலாந்து அணி அந்த வெற்றிக்கு தகுதியானது தான்’’ என்றார்.

மேலும் சில
  • அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து



  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி



  • ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்



  • உலகின் மிக பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வண்ணமயமாக இன்று தொடக்கம்: இந்திய வீரர், வீராங்கனைகள் 127 பேர் பங்கேற்பு



  • யூரோ கோப்பை கால்பந்து: இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது..! பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது



  • 16 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் அமீரகத்தில் அக். 17ல் தொடக்கம்: நவம்பர் 14ம் தேதி இறுதி போட்டி



  • இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்: உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு?



  • டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நாளை துவக்கம்: இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை: பட்டம் வெல்லப்போவது யார்?



  • இங்கிலாந்து புறப்படும் முன் கொரோனா பாதித்தால் அணியில் இடம் இல்லை: பிசிசிஐ அதிரடி



  • பஞ்சாப் அணிக்கு எதிராக அபார வெற்றி: எதிரணியினர் எங்கள் பந்துவீச்சாளர்களை சமாளிப்பது கடினம்..! டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் சொல்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]