இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காற்றில் கலந்துள்ள நச்சு வாயுவால் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் : மாசு கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவல்

7/5/2025 2:44:12 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

திருமலை திருமலையில் 100 மைக்ரான் அளவு காற்று மாசடைந்துள்ளது. இதனால் ஏற்படும் நச்சு வாயுவால் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக  மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் திருமலையில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திருப்பதி-திருமலை இடையே தினந்தோறும் 1500 டிரிப்புகள் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு மாநிலங்களில் இருந்து கார், பைக், வேன் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருமலைக்கு வந்து செல்கிறது. இதன் மூலும் தினசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் திருமலையில் உள்ள காற்று மாசு கண்காணிப்பதற்காக மாநில மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஐதராபாத், டெல்லி, விஜயவாடா போன்ற பெருநகரங்களில் 60 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்த நிலையில் திருமலையில் 100 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, உடனடியாக தேவஸ்தான நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இல்லாவிட்டால் காற்றில் கலக்கக்கூடிய நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயுவால் திருமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘திருமலையில் டீசல் வாகனங்களை குறைத்து பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்தும் விதமாக இலவச பேருந்துகள் அனைத்தும் பேட்டரி வாகனங்களாக மாற்றப்படும்’ என்றார்.

தலைமுடி 6 கோடிக்கு ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். அவை 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது.அதன்படி திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்க்கெட்டிங் துறை அலுவலகத்தில் நேற்று தலைமுடி ஏலம் விடப்பட்டது. இதில் 76 ஆயிரத்து 500 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ₹6.01 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



  • இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது



  • பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி உட்பட 6 பேர் கும்பல் கைது



  • கேரள தங்க கடத்தல் வழக்கு தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ திட்டம்: நள்ளிரவில் சொப்னா வீட்டில் சிவசங்கர் ‘ரிலாக்ஸ்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]