இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

10 அணிகளும் தலா 8 போட்டியில் பங்கேற்ற நிலையில் கடைசி லீக் போட்டிகள் தொடங்கின: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

7/3/2025 3:27:51 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

லண்டன்:  உலக கோப்பை போட்டியின் கடைசி லீக் போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. 10 அணிகள் மோதிய லீக் போட்டியில் இதுவரை  நடந்த தலா 8 போட்டிகளில் அனைத்து அணிகளும் மோதிவிட்டன. புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும் அடுத்தடுத்த இடங்களில்  இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ெவஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள்  உள்ளது. இதில், முதல் 4 இடங்களுக்குள் வந்துள்ள 4 அணிகளும் அரையிறுதி போட்டியில் மோதும் நிலையில், ஏற்கனவே ஆஸ்திரேலியாவும்,  இந்தியாவும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு செஸ்டர் - லி - ஸ்ட்ரீட் மைதானத்தில் நடக்கும் 41வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து  அணிகள் மோதுகின்றன.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி எடுத்து  புள்ளிபட்டியலில் 4வது இடம் வகிக்கிறது. இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் சற்று தடுமாற்றத்திற்குள்ளான. இங்கிலாந்து அணி,  இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 337 ரன்கள் குவித்து மீண்டும் எழுச்சி பெற்று விட்டது.8 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியும் இன்றைய ஆட்டத்தில் வாகை  சூடினால், அரைஇறுதியை உறுதி செய்யும். தோற்றால் மற்ற அணியின் முடிவை பொறுத்து நியூசிலாந்தின் வாய்ப்பு தீர்மானிக்கப்படும். தொடக்கத்தில்  பலத்தை காட்டிய நியூசிலாந்து அணி கடைசி இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

மொத்தத்தில் இரு அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோதலாக அமைந்துள்ளதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியலில், இங்கிலாந்து அணியில், ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென்  ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட் ஆகியோரும், நியூசிலாந்து அணியில் மார்ட்டின்  கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர்,  லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட், மேட்ஹென்றி அல்லது டிம் சவுதி ஆகியோரும் விளையாடுகின்றனர்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]