இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

‘பாபர் அசாமின் பெஸ்ட் இன்னிங்ஸ்’: சர்பராஸ் புகழாரம்

6/27/2019 4:03:41 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

பர்மிங்காம்: ‘‘பாபர் அசாமின் பெஸ்ட் இன்னிங்ஸ் இது’’ என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐசிசி உலக கோப்பை தொடரில் பர்மிங்காமில் நேற்று நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 41 ரன் எடுத்தார். நியூசிலாந்து 26.2 ஓவரில் 83 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்து தடுமாறிய போது, நீஷம் - கிராண்ட்ஹோம் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடி 132 ரன் சேர்த்தது. உலக கோப்பை போட்டிகளில் 6வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது. கிராண்ட்ஹோம் 64 ரன், நீஷம் 97 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ெசாற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 3, அமீர், ஷதாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

238 ரன் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 49.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வென்றது. பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 101 ரன்களை குவித்தார். ஹாரிஸ் சோஹைல் 68 ரன், ஹபீஸ் 32 ரன் எடுத்தனர். பாபர் ஆட்ட நாயகனாக தேர்வானார். பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில், ‘‘ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி. பீல்டிங் முக்கியமானது. பயிற்சியில் கடினமாக ஈடுபட்டாலும், இந்த ஆட்டம் வரை எங்களது பீல்டிங் சொதப்பலாக இருந்தது. பாகிஸ்தான் அணி ஓரங்கட்டப்படும் போதெல்லாம், வீரர்கள் நன்றாக ஆடுகின்றனர். இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி. அமீர், ஷாஹீன், சதாப் சிறப்பாக பந்து வீசினர். பாபர், ஹாரீஸ் நன்றாக பேட்டிங் செய்தனர். என்னை பொறுத்தவரை, பாபர் அசாமின் பெஸ்ட் இன்னிங்ஸ் இது. நியூசிலாந்து பவுலர்கள் கொடுத்த அழுத்தத்தை எதிர்கொண்டு அவர் மிகச்சிறப்பாக ஆடினார். நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. அடுத்து வரும் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்’’ என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் பவுலர்கள் நெருக்கடி தந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய போது, ஆட்டத்தின் போக்கு எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் பாபர், ஹாரீஸ் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது’’ என்றார். ஆட்ட நாயகன் பாபர் கூறுகையில், ‘‘கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வென்றோம். திட்டமிட்டபடி கடைசி ஓவர் வரை நின்று ஆடினோம்’’ என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • இன்று மேற்கிந்திய தீவுகளுடன் மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா



  • இன்று நியூசிலாந்து அணியுடன் மோதல் பாக். அணியின் அரையிறுதி கனவு பலிக்குமா?



  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி...மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை



  • ஆப்கான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வெளியேறின அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி ஆஸ்திரேலியா!...அடுத்த இடத்தில் நியூசிலாந்து, இந்தியா; இங்கிலாந்து தேறுமா?



  • மீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்!,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி



  • பவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’



  • இன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா?



  • கனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்!



  • இன்றைய போட்டி பவுலர்களுக்கு சாதகம் அடிச்சா அரையிறுதியில் நுழைஞ்சிடலாம்!; ஆப்கானை வீழ்த்த வங்கதேசம் வியூகம்



  • 2003ல் நடந்தது போல் இப்போதும்... தென்னாப்பிரிக்காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு பறிபோனது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]