இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: பெண்ணை கைது செய்த போலீசார் சிறுமியின் கதறலால் விடுவிப்பு

6/27/2019 4:00:34 PM
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: திமுக, அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர்கள் ஆலோசனை ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்

சூலூர்: விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை சூலூர் அருகே போராட்டம் நடத்திய விவசாயிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். ‘எங்கே செல்வோம் நாங்கள்?’ என 10 வயது சிறுமி கதறியழுததால் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் தாயை போலீசார் விடுவித்தனர்.

தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுர வழித்தடம் அமைக்க விவசாய நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி பகுதியில் நேற்று உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பவர்கிரிட் சர்வேயர்கள் அப்பகுதிக்கு வந்தனர். தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி. பாஸ்கரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் நிலம் அளவிடும் பணியை நிறுத்தும் வரை போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது அங்கிருந்த பெண் ஒருவர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுரத்தில் ஏறி கோஷமிட்டார். போலீசார் அவரை கீழே இறக்கி சமாதானப்படுத்தினர். அப்போது அந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை கைது செய்து அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போது, அந்த பெண்ணின் மகள் (10), ‘எங்களது நிலங்களை நீங்கள் எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கு செல்வோம்?. என் தாயை கைது செய்ய வேண்டாம்’ என்று கூறி கண்ணீர் மல்க போலீசாரிடம் கெஞ்சினாள். இதனைடுத்து சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்யவில்லை.

மேலும் சில
  • பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்: சேப்பாக்கம் எழிலகத்தில் பரபரப்பு



  • சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஜூலை 2 வரை லீவ் இல்லை



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவியுங்கள்: கூட்டுறவு துறை செயலாளரிடம் கோரிக்கை



  • நீதிமன்ற உத்தரவின்பேரில் ரெட்டேரி-பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை



  • காஞ்சி.வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் உற்சவம்: களைகட்டுகிறது திருவிழா



  • வண்டலூரில் ஆட்டோ டிரைவர் கொலை 10 பேரிடம் போலீசார் விசாரணை



  • இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது



  • ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையில் அடைப்பு



  • அரசு ஆஸ்பத்திரியில் அவலம் சிறுமியை கடித்து குதறிய நாய்கள்:நோயாளிகள் பீதி



  • ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உடல் கருகி பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]