இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஏசி, இன்டர்நெட், ஸ்மார்ட் வகுப்பறையுடன் திருவண்ணாமலையில் அதிநவீன அரசு பள்ளி

6/27/2019 3:57:00 PM
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: திமுக, அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர்கள் ஆலோசனை ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ரூ.27 லட்சம் செலவில் ஏசி, இன்டர்நெட், ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் அமைக்கப்பட்ட அரசு பள்ளியை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய ெதாடக்க பள்ளியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளியாக மாற்ற கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முடிவு செய்தார். இதற்கான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று நிறைவுபெற்றது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, பள்ளியை திறந்து வைத்தார். இப்பள்ளிக்கு நேற்று வந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற இப்பள்ளியை தேர்வு செய்தோம். அதன்படி ரூ27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து வசதிகளும் கொண்டதாக  இப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 30 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில், தற்போது கூடுதலாக 23 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். புரொஜக்டர், டிவி, இணையதளம், குளிர்சாதன வசதி, இருக்கைகள், அலமாரிகள், அறிவியல் விளையாட்டு உபகரணங்கள் உள்பட அனைத்து வசதிகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் உள்ள டிவியில் குழந்தைகளுக்கு பிடித்த அறிவியல் சார்ந்த குறும்படம் ஒளிபரப்பப்படும். தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள் வருகை பதிவேடு பயோ மெட்ரிக் முறையில் செயல்பட உள்ளது. உணவு உண்ணும் இடம், காலணிகள் வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியாக கழிவறை வசதி, மாணவர்களுக்கு நவீன கழிவறை வசதி, மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் மேலும் 18 பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் சில
  • பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்: சேப்பாக்கம் எழிலகத்தில் பரபரப்பு



  • சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஜூலை 2 வரை லீவ் இல்லை



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவியுங்கள்: கூட்டுறவு துறை செயலாளரிடம் கோரிக்கை



  • நீதிமன்ற உத்தரவின்பேரில் ரெட்டேரி-பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை



  • காஞ்சி.வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் உற்சவம்: களைகட்டுகிறது திருவிழா



  • வண்டலூரில் ஆட்டோ டிரைவர் கொலை 10 பேரிடம் போலீசார் விசாரணை



  • இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது



  • ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையில் அடைப்பு



  • அரசு ஆஸ்பத்திரியில் அவலம் சிறுமியை கடித்து குதறிய நாய்கள்:நோயாளிகள் பீதி



  • ஓடும் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உடல் கருகி பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]