இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தஞ்சையில் நாளை முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

6/27/2019 3:54:42 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

மன்னார்குடி: தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் டெல்டாவில் விவசாயிகள் தினமும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 23ம் ேததி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் துவங்கி ராமேஸ்வரம் வரை சுமார் 600 கி.மீ தூரம் அதிமுக, பாஜ தவிர்த்து, அனைத்து கட்சிகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இந்நிலையில், டெல்டாவில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதுவிவசாயிகளை மேலும் கொந்தளிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரிப் பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி அதனை சட்டமாக்கக் கோரி நாளை (28ம் தேதி) முதல் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. நாளை நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி டெல்டா மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி மயிலாடுதுறையில் மாநாடு நடைபெற உள்ளது. கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை வகிக்கிறார். ஏற்கனவே இந்த மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மேலும் சில
  • சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை



  • காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்



  • பல்லாவரம் நகராட்சியில் குடிநீரை அதிக விலைக்கு விற்கும் ஆளுங்கட்சியினர்



  • சேலம் கலெக்டர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்



  • பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்: சேப்பாக்கம் எழிலகத்தில் பரபரப்பு



  • சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஜூலை 2 வரை லீவ் இல்லை



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவியுங்கள்: கூட்டுறவு துறை செயலாளரிடம் கோரிக்கை



  • நீதிமன்ற உத்தரவின்பேரில் ரெட்டேரி-பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை



  • காஞ்சி.வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் உற்சவம்: களைகட்டுகிறது திருவிழா



  • வண்டலூரில் ஆட்டோ டிரைவர் கொலை 10 பேரிடம் போலீசார் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]