கிராமணி மக்கள் வாழ்வுரிமை நலச்சங்கம் சார்பில் மபொசி 114வது பிறந்தநாள் விழா: 500 பேருக்கு உணவு
6/27/2019 3:52:32 PM
கீழ்ப்பாக்கம்: சுதந்திர போராட்ட வீரரும் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க காமராஜருடன் இணைந்து பணியாற்றியவருமான ம.பொ.சிவஞானத்தின் 114வது பிறந்தநாள் விழா தி.நகர் பாண்டிபஜார் தெற்கு போக் சாலையில் கொண்டாடப்பட்டது.
இதற்கு கிராமணி மக்கள் வாழ்வுரிமை நலச்சங்கத்தின் தலைவர் சுந்தரபாபு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.பி.பச்சையப்பன், பொருளாளர் கே.வி.எஸ். தமிழ்வாணன், துணை பொதுச்செயலாளர் என்.என்.வேதகிரி, அமைப்பு செயலாளர் எஸ்.அன்பழகன், துணை செயலாளர் ஆர்.செல்வம், தலைமை கவுரவ ஆலோசகர் கே.பாலாஜி, செயற்குழு உறுப்பினர் மயிலை எம்.தசரதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.மணி, தென்சென்னை மாவட்ட தலைவர் எஸ்.பி.சிட்டிபாபு, மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பொருளாளர் எஸ்.சேகர், எம்.பி.மணி, என்.லோகநாதன், மோகன்ராஜ், சுகுமார், எஸ்.கணேஷ்குமார், சிவராஜேஷ், தரமணி கே.சிவா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மபொசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரத்தில் 500 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொருளாளர் தமிழ்வாணன், பொதுச்செயலாளர் பச்சையப்பன் செய்தனர்.