ஒடிசா மத்திய கிடங்குகள் கார்பரேஷன் மேலாண் இயக்குநராக தொழில் அதிபர் சிவகுமார் நியமனம்
6/27/2019 3:46:25 PM
சென்னை: ஒடிசா மத்திய கிடங்குகள் கார்பரேஷன் மேலாண் இயக்குநராக தொழில் அதிபர் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இளம் தொழில் முனைவோராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் டாக்டர் பி.சிவகுமார். இவர் முத்தாரம்மன் குரூப் நிறுவனத்தை தொடங்கி, வணிகம், சந்தை, பால், மணல் உள்ளிட்ட 14 துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இருபது ஆண்டு கால தொழில்துறை அனுபவம் கொண்ட டாக்டர் சிவகுமார் ஆண்டிற்கு ரூ.200 கோடி வர்த்தகம் புரிந்து வருகிறார். இவரது நிறுவனத்தில் 400க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இவரது தொழிற்துறை அனுபவம், செறிவான லாபமுறை ஆகியவற்றை கண்டு ஒடிசா மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசு கிடங்குகள் கார்பரேஷன் மேலாண் இயக்குநராக நியமித்து உள்ளது. இவர் அந்த பதவியில் 2021 வரை இருப்பார் என நியமன குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவரை ஒடிசா மாநிலத்தின மத்திய கிடங்குகள் கார்பரேஷன் மேலாண் இயக்குராக நியமிப்பது இதுவே முதல் முறையாகும். ஒடிசா மத்திய கிடங்குகள் கார்பரேஷன் மேலாண் இயக்குநராக நியமிக்கபட்டதை தொடர்ந்து பி.சிவகுமார், பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.