இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது சென்னையில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

6/27/2019 2:53:18 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து கேரளாவில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைப்பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேலத்தில் 28.4 மி.மீட்டர் மழை பெய்தது. இதேபோல், வால்பாறை, பரங்கிபேட்டை, குன்னூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்தது.

சென்னையில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம்  குறைந்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக  நேற்று மாலை முதல் இரவு முழுவதும் சில பகுதிகளில் மிதமான மழையும் சாரல் மழையும் பெய்தது. குறிப்பாக, அண்ணாநகர், கிண்டி, அசோக்நகர், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், தி.நகர், ராயப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 9.5 மி.மீட்டர் மழை பதிவானது.  இதைத்தொடர்ந்து சென்னையில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பத்தின் அளவு 26 டிகிரி முதல் 35 டிகிரி வரை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை



  • காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்



  • பல்லாவரம் நகராட்சியில் குடிநீரை அதிக விலைக்கு விற்கும் ஆளுங்கட்சியினர்



  • சேலம் கலெக்டர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்



  • பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்: சேப்பாக்கம் எழிலகத்தில் பரபரப்பு



  • சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஜூலை 2 வரை லீவ் இல்லை



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவியுங்கள்: கூட்டுறவு துறை செயலாளரிடம் கோரிக்கை



  • நீதிமன்ற உத்தரவின்பேரில் ரெட்டேரி-பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை



  • காஞ்சி.வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் உற்சவம்: களைகட்டுகிறது திருவிழா



  • வண்டலூரில் ஆட்டோ டிரைவர் கொலை 10 பேரிடம் போலீசார் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]