இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பரங்கிமலையில் வேனில் 180 கிலோ கஞ்சா பறிமுதல்

6/26/2019 4:39:20 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

ஆலந்தூர்: பரங்கிமலை ராணுவ மைதானம் அருகே மர்ம நிலையில் நின்றிருந்த வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 180 கிலோ கஞ்சாவையும் வேனையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.
சென்னை பரங்கிமலை ராணுவ விளையாட்டு மைதானம் அருகே நார்த் பரேடு சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மர்ம நிலையில் ஒரு வேன் நின்று கொண்டிருப்பதாக பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் அங்கு ரோந்து பணியில் இருந்த எஸ்ஐகள் குருபரன், உஷா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்ம நிலையில் நின்றிருந்த வேனின் மேற்கூரையை உடைத்து பார்த்தனர். அதில் ஒரு அட்டை பெட்டி இருப்பதை கண்டறிந்தனர்.

 அந்த பெட்டியை போலீசார் உடைத்து பார்த்தபோது, அதில் கஞ்சா வாடை அடித்துள்ளது. இதையடுத்து அந்த வேனை பரங்கிமலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி முன்னிலையில், வேனின் பூட்டை உடைத்து, அங்கிருந்த அட்டை பெட்டியை உடைத்து சோதனை செய்தனர். அதில் 180 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். வேனின் நம்பரை வைத்து, இந்த வேனின் உரிமையாளர் யார், கஞ்சா கடத்தியவர்கள் யார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாக பரங்கிமலை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதேபோல் யாரோ கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து, இப்பகுதிகளில் சில்லறை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கலாம் என பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • நெருக்கமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியதால் வாலிபரை தீர்த்து கட்டினேன்... கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்



  • சிறுமியிடம் அத்துமீறிய ரவுடி கைது



  • பைக்கில் சென்ற ஒப்பந்ததாரருக்கு சரமாரி வெட்டு...2 பேர் கைது



  • எண்ணூரில் 3 பேருக்கு சரமாரி வெட்டு: 2 ரவுடிகளுக்கு வலை



  • திருவனந்தபுரம் சிறையில் இருந்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்



  • திருமணம் செய்துகொள்வதாக கூறி பேஸ்புக் தோழி பலாத்காரம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு



  • இரிடியம் தருவதாக பல லட்சம் மோசடி கும்பல் தலைவனை பிடிக்க சென்னை பெங்களூருக்கு தனிப்படை விரைவு



  • புதுச்சேரி பகுதியில் பிரபல கம்பெனி பெயரில் போலி செல்போன் உதிரிபாகம் விற்பனை...வியாபாரி கைது



  • விவகாரத்து பெற்ற மனைவியுடன் வாழ்ந்துவந்த மகனை கடத்திய தந்தை கைது



  • ஆதீனத்துக்கு கொலை மிரட்டல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]