இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் 104 கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்: ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் முறையீடு

6/26/2019 3:50:09 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

புதுடெல்லி: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேலும் 104 கிணறுகள்  அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி, ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதால், டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் ெபாதுமக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மாநில அரசுகளால், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 67 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் அமைக்க வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. ஆனால், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் தீவிரப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன், அதிமுக, பாஜ தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 600 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 லட்சம் பேர் கலந்துகொண்ட மனிதசங்கிலி போராட்டம் நடத்தின.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல் அனுமதிகோரி சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்துள்ளது. இதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கூடுதலாக 104 கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சாவூரில் 18 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகளும், கடலூரில் 7 கிணறுகளும், ராமநாதபுரத்தில் 3 கிணறுகளும் அமைக்க திட்டமிட்டு, அதற்கான முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

‘ஆயில் அண்ட் நேட்சுரல் காஸ் கார்ப்ரேஷன் லிமிட்டெட், சப் சர்பேஸ் வீம், காவேரி அசட், காரைக்கால்’ என்ற ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இருந்து, மத்தகிய அரசின் தொழிலக திட்டம் - 2, செயலருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.  அதில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நாட்டில் 82 சதவீதம் பெட்ரோலிய மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசு வருகிற 2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலிய மூலப்பொருட்கள் இறக்குமதியை 10 சதவீதம் அளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளது.  அதனால் அந்த இலக்கை அடையவேண்டுமானால் ஓஎன்ஜிசி சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த முடியும். அதனால், 104 இடங்களில் மேலும் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி தரவேண்டும்.

இது தொடர்பான ஆவணங்கள் இக்கடித்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் சிஜிஎம் கே.முரளீதரன் என்பவர் கடந்த 18ம் தேதி கைெயழுத்திட்டுள்ளார்.  இந்நிலையில், பொதுக்களின் எதிர்ப்பை மீறி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேலும் 104 கிணறுகள்  அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி, ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதால், டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  மாவட்டம் வாரியாக நாகையில்  காளி, நரிமணம்; திருவாரூரில் அதியக்காமங்கலம், விஜயபுரம், கமலாபுரம், கோவில்கலப்பால், வடக்கு கோவில்கலப்பால், அத்திகடை, மாத்தூர், மேற்கு மாத்தூர், தஞ்சாவூரில் புன்டி, அரியலூரில் அந்திமாடம், ராமநாதபுரத்தில் ராமனவலசை, கடலூரில் நெய்வேலி உள்ளிட்ட 17 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • ஏழுமலையான் கோயிலில் ரூ4.19 கோடி காணிக்கை



  • பஸ் நிலையத்தில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்



  • போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்: விதிமீறும் எம்பி, எம்எல்ஏவிடம் இருமடங்கு வசூல்...மத்திய அரசு அதிரடி



  • கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட ‘பிரஜா வேதிகா’ அரண்மனை கட்டிடம் இடிப்பு: பாதுகாப்பு வாபஸ்சை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை



  • தங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது



  • கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்



  • பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்



  • ஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி



  • கேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]