இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பஸ் நிலையத்தில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்

6/26/2019 3:48:55 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

திருமலை: தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் கடம்ப் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் நிர்மலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக நிர்மல் பஸ் நிலையத்திற்கு வந்தார். ஆனால் தங்கள் கிராமத்திற்கு செல்லும் கடைசி பஸ் சென்று விட்டது தெரிய வந்தது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் பஸ் நிலையத்திலேயே அமர்ந்திருந்தார். நீண்ட நேரமாக இருந்த அந்த பெண்ணை  பார்த்த ஒரு கும்பல், அவரிடம் கேலி, கிண்டல் செய்துள்ளனர். தவறாக நடக்க முயன்றதாகவும் தெரிகிறது.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த குற்றப்பிரிவு போலீஸ்காரர் கங்காதர் அங்கு விரைந்து வந்தார். இதை பார்த்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் அருகில் அமர்ந்த போலீஸ்காரர் கங்காதர் ஆதராக பேசியுள்ளார். பின்னர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதாக கூறி தனது பைக்கில் இளம்பெண்ணை அழைத்துச் சென்றார். அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனிடையே போலீஸ்காரர் மீது சந்தேகம் ஏற்பட்டதால்  பஸ் நிலையத்தில் இருந்த அப்பகுதியினர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் காவலர்கள் யாரும் வராததால் புகார் தெரிவித்தவர்களே நேரடியாக அந்த அறைக்குச் சென்று கங்காதரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்.பி. சசிதர்ராஜு காவலர் கங்காதரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் சில
  • அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • ஏழுமலையான் கோயிலில் ரூ4.19 கோடி காணிக்கை



  • டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் 104 கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்: ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் முறையீடு



  • போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்: விதிமீறும் எம்பி, எம்எல்ஏவிடம் இருமடங்கு வசூல்...மத்திய அரசு அதிரடி



  • கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட ‘பிரஜா வேதிகா’ அரண்மனை கட்டிடம் இடிப்பு: பாதுகாப்பு வாபஸ்சை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை



  • தங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது



  • கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்



  • பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்



  • ஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி



  • கேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]