இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: கனரா வங்கி அதிரடி அறிவிப்பு

6/25/2019 2:44:37 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

சென்னை: ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம் ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.பாஜக அரசு வந்த பிறகு வங்கியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வங்கியில் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தினால் அந்த கணக்கு குறித்த விவரங்கள் உடனடியாக வருமான வரித்துறைக்கு சென்று விடும். மேலும் வங்கியில் குறிப்பிட்ட அளவு பணம் இல்லாவிட்டால் அபராதம் வசூலிப்பது கொண்டு வரப்பட்டது. தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் மாதம் 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதற்கு மேல் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதைத் தவிர, அடுத்த வங்கியில் 3 முறைக்கு மேல் எடுத்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது குறித்து கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒரு மாதத்தில் முதல் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரத்துக்குள் டெபாசிட் இலவசம். 3 முறைக்கு மேல் செலுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.50ம், மற்றும் ஜிஎஸ்டி, அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.50ம், அதிக பட்சம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். நமது வங்கிக் கணக்கில் சேமிப்பு கணக்கில் முதல் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 5 முறைக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.100ம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.
நமது வங்கிக் கிளையில் நடப்பு கணக்கில், மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ரூ.5 லட்சத்துக்கு மேல் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய், அதிக பட்சம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது கனரா வங்கி மட்டும் இந்த அறிவிப்புகளை செய்துள்ளது. இனி அடுத்தடுத்து மற்ற வங்கிகளும் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை



  • காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்



  • பல்லாவரம் நகராட்சியில் குடிநீரை அதிக விலைக்கு விற்கும் ஆளுங்கட்சியினர்



  • சேலம் கலெக்டர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்



  • பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்: சேப்பாக்கம் எழிலகத்தில் பரபரப்பு



  • சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஜூலை 2 வரை லீவ் இல்லை



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவியுங்கள்: கூட்டுறவு துறை செயலாளரிடம் கோரிக்கை



  • நீதிமன்ற உத்தரவின்பேரில் ரெட்டேரி-பேப்பர் மில்ஸ் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை



  • காஞ்சி.வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் உற்சவம்: களைகட்டுகிறது திருவிழா



  • வண்டலூரில் ஆட்டோ டிரைவர் கொலை 10 பேரிடம் போலீசார் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]