100 பேருக்கு நலத்திட்ட உதவி
6/17/2019 4:56:30 PM
கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் திமுக சார்பில், கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவருமான எம்.கே.தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி.கார்த்திக், நிர்வாகிகள் கே.பி.ஜார்ஜ், அஞ்சூர் ராஜேந்திரன், பத்மநாபன், முன்னாள் வார்டு கவுன்சிலர் டில்லி முன்னிலை வகித்தனர். பேரூர் பொறுப்பாளர் ஜி.கே.லோகநாதன் வரவேற்றார்.
இதில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, தலைமைக்கழக பேச்சாளர்கள் கரூர் முரளி, சேலம் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டனர். 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொழிலதிபர் மதுசூதனன், மாவட்ட துணை அமைப்பாளர் ஆராமுதன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் சதீஷ்குமார், டில்லி, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.