இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருத்தணி நகராட்சியில் சிமென்ட்ஷீட் கூரைவீட்டில் அங்கன்வாடி மையம்: அனலில் குழந்தைகள் அவதி

6/12/2025 3:28:36 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட சிமென்ட்ஷீட் கூரைவீட்டில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதனால் அனல் தாங்காமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். திருத்தணி நகராட்சி, 12-வது வார்டான பெரியார் நகர், பால விநாயகர் கோவில் தெருவில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மையத்துக்கு ஒன்றிய பராமரிப்பில் இருந்து தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் இல்லாததால், இந்த அங்கன்வாடி மையம் ஒரு தனியாரின் வீட்டில் வாடகைக்கு இயங்கி வருகிறது.

இந்த மையத்தின் மேற்கூரை தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட சிமென்ட்ஷீட்களினால் வேயப்பட்டு உள்ளது. தற்போதைய கோடை வெயிலின் அனல் தாக்கத்தினால், இங்கு படிக்கும் குழந்தைகள் புழுக்கத்தில் தவித்து வருகின்றனர். இதனால் குழந்தைகளின் உடலில் கொப்புளங்களும் உடல் எரிச்சலும் ஏற்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரே அறைக்குள் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடைந்து கிடப்பதால், வெயிலின் தாக்கத்தில் மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது மிகுந்த சோர்வுடன் காணப்படுகின்றனர். எனவே, இந்த அங்கன்வாடி மையத்தை வேறொரு காற்றோட்டமிக்க இடத்தில் மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சில
  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



  • தமிழக அரசு ரூ.68 கோடி இழப்பீடு வழங்கியதன் மூலம் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது; 4.4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளியும் அடங்கும்



  • சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளரின் தாயாருக்கும் கொரோனா என தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]