சென்னை, சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு செய்யாறு, சேத்துப்பட்டில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
6/10/2025 3:24:39 PM
செய்யாறு: சென்னை, சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு, சேத்துப்பட்டு பகுதியில் விவசாயிகள், கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக தமிழக அரசு மேல்முறையீடு செய்ததை திரும்பப் பெற வேண்டியும், 8 வழிச்சாலையை ஆதரித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தேத்துரை கிராமத்தில் விவசாயிகள் கறுப்பு கொடியுடன் கிணற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு ஒன்றியம் ராந்தம் மலைமேடு பகுதியில் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட ஒருங்கிணைப்பாளர் குப்பன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமனோர் கலந்துகொண்டனர். அவர்கள் 8 வழி சாலை திட்டத்தை கண்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆத்தூரை, பாடகம், ராந்தம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான விவசாயிகள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.