அரக்கோணம் திமுக எம்பியாக வெற்றி தொகுதி மக்களுக்கு ஜெகத்ரட்சகன் நன்றி
5/27/2019 3:09:04 PM
பள்ளிப்பட்டு: அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்ற எஸ்.ஜெகத்ரட்சகன், முதல் முறையாக பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். முன்னதாக, பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோயிலில் எஸ்.ஜெகத்ரட்சகன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, பள்ளிப்பட்டில் பேரூர் செயலாளர் ஜோதிகுமார், பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் டி.ஆர்.கே.பாபு, ஆர்.கே. பேட்டையில் ஒன்றிய செயலாளர்கள் பழனி, சண்முகம் ஆகியோர் தலைமையில் அம்மையார்குப்பம், வங்கனூர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இவருடன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் சத்யராஜ், நெசவாளரணி துணை அமைப்பாளர் நாகலிங்கம், தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, பொது குழு உறுப்பினர் மா.ரகு, நிர்வாகிகள் ரவீந்திரநாத் ரெட்டி, தண்டபாணி, சுப்பிரமணி, ரவி, சீராலன், சம்பத், செங்குட்டுவன், பன்னீர்செல்வம், வெங்கடாசலம், மோகன் உட்பட பலர் உடன் சென்றனர்.