காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிக்கை
5/24/2019 3:01:17 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை : காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை காலை 9 மணியளவில் வாலாஜாபாத் உமா சேகர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் சுகுமார் தலைமையில் நடக்கிறது. மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, வசந்தமாலா, தசரதன் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாநில மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.