திருவொற்றியூரில் பள்ளி வாகனங்கள் தர ஆய்வு
5/16/2019 3:23:54 PM
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூரில் தண்டையார்பேட்டை மற்றும் புளியந்தோப்பு ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளிகளின் பேருந்துகள், மினி வேன்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணி நேற்று திருவொற்றியூர், அம்மன் கோவில் தெரு அருகே நடைபெற்றது. இந்த ஆய்வுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து ஆய்வாளர்கள் சரவணன், ஜெய்கணேஷ், செண்பகவல்லி, அருண், சிவகுமார் ஆகியோர் 30-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் தர ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவி, தரம், மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் கதவுகள் உறுதியாக உள்ளதா என்பது போன்ற பல்வேறு அம்சங்களை ஆர்டீஓ அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.