இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுப்பு கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா

5/16/2019 3:18:15 PM
திருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை: உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தங்கம் விலை மீண்டும் சரிவு; சவரனுக்கு ரூ360 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

* சேலத்தில் சென்னை பெண்ணுக்கு கொடுமை

சேலம்: சேலம் அருகே கர்ப்பமாக்கி விட்டு, ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம்,  மேச்சேரி ஒன்றியம் காமனேரியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகன் லோகநாதன்(26). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில்  வேலை பார்த்து வருகிறார். அப்போது, அதே நிறுவனத்தில் பணி புரியும் சென்னை புழல் பகுதியை சேர்ந்த ஜாங்கர் மகள்  பிரியா(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். நெருங்கி பழகியதன் விளைவாக, கடந்த ஜனவரி மாதம்  பிரியா கர்ப்பமானார். லோகநாதன் வற்புறுத்தியதால், பிரியா கருவை கலைத்து விட்டார். பின்னர், திருமணம் செய்து கொள்ளும்படி பிரியா வற்புறுத்தியதால், கடந்த 1ம் தேதி அவரை ஓமலூருக்கு அழைத்து வந்த லோகநாதன், அவரை ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் தவிக்க விட்டு மாயமானார்.

இதையடுத்து, காதலன் வீட்டை தேடி சென்ற  பிரியாவை, லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள், ஜாதியை காரணம் காட்டி அவரை விரட்டியுள்ளனர். ஆனால், பிரியா செல்ல  மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், லோகநாதன்,  அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தாக்கியதில் பிரியா காயமடைந்தார். இதையடுத்து, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதனிடையே, அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், பிரியாவுக்கு உதவி செய்வதாக கூறி, லோகநாதன் தரப்பினரை  மிரட்டி ரூ.1.50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே,  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிரியா, காதலன் வீட்டிற்கு மீண்டும் சென்றார். அப்போது, லோகநாதன் தரப்பினர் அவரை அடித்து, வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றனர். அவர்களிடம்  இருந்து தப்பிய பிரியா, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து  விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு அறிவுரை கூறி, சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரது பெற்றோர்  மற்றும் உறவினர்கள் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டதால்,  அதிர்ச்சியடைந்த பிரியா நேற்று மதியம் மீண்டும் மேச்சேரியில் உள்ள  லோகநாதன் வீட்டிற்கு வந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்,  மேச்சேரி போலீசார் வந்து, பிரியாவிடம் விசாரணை நடத்தினர்.  பிரியாவின் புகார்  மீது உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்த போலீசார்,  பிரியாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று  விசாரித்து வருகின்றனர். பெற்றோர்  மற்றும் உறவினர்கள் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டனர். பிரியா, காதலன் வீட்டிற்கு மீண்டும் சென்றார். அப்போது, லோகநாதன் தரப்பினர் அவரை அடித்து, வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றனர்.

மேலும் சில
  • திருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை: உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்



  • தங்கம் விலை மீண்டும் சரிவு; சவரனுக்கு ரூ360 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • விடிய விடிய பெய்யும் கனமழை வீடுகளில் முடங்கிய மக்கள்: நிவர் புயலால் 2வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை



  • 22 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறப்பு



  • பலத்த சேதம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; நிவர் புயல் சூப்பர் புயலாக மாறும்: விடிய விடிய கரையைக் கடக்கும்



  • நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கு ஆம்னி சேவை கட்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு



  • தமிழகத்தை `நிவர்’புயல் தாக்கும் அபாயம்; முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி ஆலோசனை



  • அதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீச்சு: நாகர்கோவிலில் இன்று காலை பரபரப்பு



  • தங்கம் விலை அதிரடி சரிவு; ஒரே நாளில் ரூ832 குறைந்தது



  • சென்னையில் இருந்து 350 கி.மீ தூரத்தில் ‘நிவர்’புயல்: வெளுத்துவாங்கும் பலத்த மழை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]