இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் தேர்தல் விதிகளை மீறிய ராமநாதபுரம் கலெக்டர்?

4/30/2019 4:13:40 PM
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கு ஆம்னி சேவை கட்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு தமிழகத்தை `நிவர்’புயல் தாக்கும் அபாயம்; முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ராமநாதபுரம்: தேர்தல் விதிகளை மீறி ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம்(தனி), சூலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்கு மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், ஆய்வுகூட்டம், குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தக்கூடாது. பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட, பொதுப்பிரசனைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்க வேண்டுமென்றால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுக்களை போட வேண்டும் என விதிமுறை உள்ளன.

இந்த நிலையில், பொதுமக்கள் குடிநீர் பிரசனை, பயிர் காப்பீடு, பட்டா வழங்க கோரி உள்ளிட்ட மனுக்களோடு ராமநாதபுரம் கலெக்டர் சேம்பர் முன் நேற்று காத்திருந்தனர். கலெக்டர் அலுவலக அதிகாரிகள், பொதுமக்கள் ஒவ்வொருவரையும் கலெக்டரை சந்திக்க அனுமதித்தாக தெரிகிறது. முக்கியமாக, காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை கலெக்டர் வீரராகவராவ் மனு வாங்கியதாகவும், மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் கலெக்டர் மனுக்களை பெற்ற விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,‘‘தேர்தல் விதிமுறைகளை மீறி ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் சில
  • நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கு ஆம்னி சேவை கட்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு



  • தமிழகத்தை `நிவர்’புயல் தாக்கும் அபாயம்; முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி ஆலோசனை



  • அதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீச்சு: நாகர்கோவிலில் இன்று காலை பரபரப்பு



  • தங்கம் விலை அதிரடி சரிவு; ஒரே நாளில் ரூ832 குறைந்தது



  • சென்னையில் இருந்து 350 கி.மீ தூரத்தில் ‘நிவர்’புயல்: வெளுத்துவாங்கும் பலத்த மழை



  • தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்ததும் 5 ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் செய்கின்றனர்: காங். நிர்வாகிகள் குறித்து குலாம்நபி ஆசாத் விமர்சனம்



  • திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது: சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய முடிவு



  • வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையை நெருங்கும் நிவர் புயல்: மாமல்லபுரம் அருகே கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்



  • சூரப்பா விவகாரத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் மோதல்; அமித்ஷாவுடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீர் சந்திப்பு: ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணையம் தொடர்பாக விளக்கம்



  • புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]