இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்

2/21/2019 4:07:10 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் இந்த ஆண்டு ஆடுகிறார் என போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் களிமண் தரையில் (கிளே கோர்ட்) அவர் கால் பதிக்க உள்ளார் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். 2018ல் ஆஸி. ஓபன் பட்டம் வென்ற அவர், தொடர்ந்து இந்த ஆண்டும் நம்பிக்கையுடன் ஆஸி. ஓபனில் பங்கேற்றார். ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிரேக்க வீரர் ஸ்டெபனாசிடம் அவர் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தார்.

இந்நிலையில் மே மாதம் ஸ்பெயினில் நடைபெற உள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் ஆடவுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் மாட்ரிட் ஓபனில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாட்ரிட்டில் ஆடினால், மே கடைசியில் துவங்க உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆட உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பெடரர் உள்ளார். இரண்டு போட்டிகளுமே கிளே கோர்ட் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ல் கடைசியாக மாட்ரிட்டில் பட்டம் வென்ற பெடரர், அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி சுற்றுகளில் வெளியேறி விட்டார். இதுவரை அவர் 3 முறை இங்கு பட்டம் வென்றுள்ளார்.
இந்த ஆண்டு மாட்ரிட் ஓபனில் கிளே கோர்ட் ஸ்டார் பிளேயர், ஸ்பெயினின் ரபேல் நடாலும் ஆடுகிறார். இவர் 5 முறை மாட்ரிட் ஓபன் பட்டம் வென்றுள்ளார். மேலும் ஆடவர் தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிச்சும், மாட்ரிட் ஓபனில் ஆடவுள்ளார். முன்னணி வீரர்கள் அனைவரும் பங்கேற்பதால் இந்த ஆண்டு மாட்ரிட் ஓபன் டென்னிஸ் களை கட்டும் என்று டென்னிஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி



  • அணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ வைரல்



  • பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்



  • உலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு



  • ஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்



  • பெர்னாண்டோ, ரஜிதா அபார பந்துவீச்சு 235 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா



  • யு-23 தேசிய அணியில் வீரர்கள் தேர்வு விவகாரம்... ஹாக்கி மட்டையால் அமித் பண்டாரிக்கு அடி: ரவுடி கும்பல் தாக்குதலால் டெல்லியில் பரபரப்பு



  • ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி எதிரொலி ‘எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை’: டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சவால்



  • புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி



  • தமிழக வீரர் விஜய் சங்கர், ரிஷப் பன்ட், ரஹானேவுக்கு வாய்ப்பு தோனிக்கு உலககோப்பை கடைசி போட்டியா?: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவர் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]