விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்
2/21/2019 3:39:37 PM
நாசிக்: விவசாய கடன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா விவசாயிகள் நாசிக்கில் இருந்து மும்பை வரை 165 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.அனைத்திந்தியா கிசான் சபா சார்பில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், குறைந்தபட்ச நிதி உதவி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கில் இருந்து மும்பை வரை சுமார் 165 கிலோமீட்டர் நடை பயண அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். அனைத்திந்திய கிசான் சபா ஏற்பாடு செய்துள்ள, இந்த அணிவகுப்பில் பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல் கடந்த வருடம் மார்ச் மாதம் அனைத்திந்திய கிசான் சபா நடத்திய நடைபயண போராட்டத்தில் நாசிக் முதல் மும்பை வரை 30 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டனர். அதேபோல் தற்போது இந்த போராட்டமும் முழுக்க முழுக்க விசாயகடன்களுக்கு விலக்களிக்க கோரி நடத்தப்படுகிறது. விவசாயிகள் வரும் 27ம் தேதி மும்பையை சென்றடைவார்கள். இந்த போராட்டம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.