திருப்போரூரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு வீரவணக்கம்
2/21/2019 2:30:59 PM
திருப்போரூர்: திருப்போரூரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு நாடு முழுவதும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திருப்போரூர் அரிமா சங்கம், எஸ்ஜெஎல் சமுதாய கல்லூரி, பாரத வித்யாலயா பள்ளி ஆகியவை சார்பில், வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்போரூரில் நடந்தது. இதை முன்னிட்டு பாரத வித்யாலயா பள்ளியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் திருப்போரூர் பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் சென்றனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த வீரர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.