இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்

2/20/2019 3:42:03 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே பெரியா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான பெரியா கல்யோடு பகுதியை சேர்ந்த கிரிபேஸ் (19), சரத்லால் (28) ஆகியோர் வெட்டி கொல்லப்பட்டனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் கேரளாவில் முழு அடைப்பு ேபாராட்டம் நடத்தப்பட்டதுடன் பல இடங்களில் வன்முறை வெடித்தது.இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் நேற்று மாலை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உடல்களை கொண்டு செல்லும் போது வழியில் ஏராளமான கடைகள் அடித்து உடைக்கப்பட்டன. சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனிடையே இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை பிடிக்க குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரதீப் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியா பகுதி சிபிஎம் உறுப்பினர் பீதாம்பரம் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.பீதாம்பரம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிபேஸும், சரத்லாலும் பெரியாவில் வைத்து என்னை தாக்கினர். அப்போது எனது கை ஒடிந்தது.

சிபிஎம் நிர்வாகியான என்னை இருவரும் சேர்ந்து தாக்கியதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து நான் கட்சி தலைமையிடம் புகார் செய்தேன். ஆனால் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்தபோதிலும் கிரிபேசையும், சரத்லாலையும் கைது செய்யவில்லை. இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் அவர்கள் இருவரையும் கொலை செய்ய தீர்மானித்தேன். எனது நண்பர்களிடம் இது குறித்து கூறினேன். அவர்கள் உதவுவதாக கூறினர். திட்டம் தீட்டி நானும், எனது நண்பர்களும் சேர்ந்து கிரிபேசையும், சரத்லாலையும் வெட்டி கொன்றோம். அந்த சமயத்தில் நான் கஞ்சா போதையில் இருந்தேன்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.ஆனால் இந்த வாக்குமூலத்தை போலீசார் முழுமையாக நம்பவில்லை என்று தெரிகிறது. இந்த இரட்டை ெகாலை சம்பவம் தொடர்பான முக்கிய நபர்களை தப்பிக்க வைத்து, வழக்கை திசை திருப்ப பீதாம்பரம் தானே கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் பீதாம்பரம் நேற்று சிபிஎம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் சில
  • அமெரிக்காவை மிஞ்சும் இந்திய தேர்தல் செலவுகள்: மக்களவை தேர்தலுக்கு ரூ.73,600 கோடி?...அமெரிக்க நிபுணர் மிலன் வைஷ்ணவ் தகவல்



  • கோட் சூட் அணிந்தவர்களுக்கே தள்ளுபடி ஏழை விவசாய கடன்களை கண்டுகொள்ளாதவர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’



  • 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து முழு விளக்கம் அளிக்க தயார் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்



  • விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்



  • காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை



  • பெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்



  • எரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்



  • மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்



  • கர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்?: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]