திருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்
2/19/2019 3:16:15 PM
திருப்பதி: திருப்பதியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை துவக்கி வைக்கிறார். திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் 177 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஓடுதளத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை மதியம் துவக்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு ரேணிகுண்டா ரயில் நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் பிரத்யும்னா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: திருப்பதிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகை தருவதால் உரிய பாதுகாப்பு மற்றும் இதர பணிகளை இணை கலெக்டர் கிரிஷா மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற உள்ள கூட்டத்தில் நான் கலந்துகொள்ள செல்வதால் அனைத்து பணிகளையும் இணை கலெக்டர் மேற்கொள்வார்’’என்றார்.