இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

8 வழிச்சாலையால் விவசாய நிலம் பறிபோவதால் மண்ணை வாரி வீசி குமுறலை வெளிப்படுத்திய பெண்கள்

2/19/2019 3:15:07 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

செங்கம்: சென்னை, சேலம் எட்டு வழிச்சாலையில் விவசாய நிலத்தை பறிகொடுத்த பெண்கள், மண்ணை அள்ளி வீசி மனகுமுறலை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அளவீடு செய்து, குறியீடு கற்கள் பதிக்கப்பட்டது. இந்த நிலையில், செங்கம் தாலுகாவில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் ஏற்கனவே 4 கட்டங்களாக நடந்தது. அப்போது விவசாயிகள், ‘’தங்களது வாழ்வாதாரமான நிலங்களை 8 வழிச்சாலை திட்டத்திற்கு வழங்க மாட்டோம்’’ என்றனர்.

இந்த நிலையில், 5ம்கட்ட கருத்துக்கேட்பு கூட்டம் செங்கம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு டிஆர்ஓ வெற்றிவேல் தலைமை தாங்கினார். மதியம் 12 மணியளவில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி, செங்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனர். பின்னர், கருத்துக் கேட்பு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள் கூறுகையில், `நாங்கள் எழுத்துபூர்வமாக சில சந்தேகங்கள், குறைகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால் விளக்கம் அளிக்கவில்லை. போலீசை வைத்து மிரட்டி பணிய வைக்க முயற்சி நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் எங்களை சந்திக்கவில்லை. எனவே, கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணித்தோம்’’என்றனர். இதன்பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது விவசாய குடும்பங்களை சேர்ந்த சில பெண்கள் மண்ணை வாரி தூவியபடி, சாபம் விட்டுக்கொண்டே சென்றனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, சிறப்பு டிஆர்ஓ வெற்றிவேலிடம் கேட்டபோது, ‘அவர்களுக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை. அதனால் குறை கூறிவிட்டு செல்கின்றனர்’ என்றார்.

மேலும் சில
  • பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்



  • பாஜ கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தம்பிதுரை இப்போது பல்டி அடித்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்



  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக அலுவலகத்தில் மோடி படம்: தொண்டர்கள் அதிர்ச்சி



  • ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு



  • சென்டர் மீடியனில் மோதி பஸ்சில் பாய்ந்தது கார் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: மேல்மருவத்தூர் அருகே பரிதாபம்



  • மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு



  • அதிமுக எம்பி விபத்தில் பலி: திண்டிவனத்தில் பயங்கரம்



  • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை



  • தொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]