இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முடிவுக்கு வந்தது வேலைநிறுத்தம் சிவகாசியில் 100 நாளுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் திறப்பு

2/19/2019 3:13:37 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

சிவகாசி: சிவகாசியில் 100 நாளுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘’பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பயன்படுத்தக்கூடாது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும். பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நவ. 13ம் தேதி முதல் 1,070 பட்டாசு ஆலைகளை மூடி, ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்கினர். இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை கடந்த 100 நாட்களாக பட்டாசு தொழிலாளர்கள் நடத்தினர். பட்டாசு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல், இடைக்கால தீர்ப்பின்படி பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும் என கலெக்டர் சிவஞானம் வலியுறுத்தினார்.

இதன்படி, ஒரு சில ஆலைகள் மட்டுமே திறக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கு நாளை (பிப். 20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 209 டிஆர்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் 150க்கும் மேற்பட்ட ஆலைகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை, நாக்பூர் உரிமம் பெற்ற ஒரு சில பட்டாசு ஆலைகளும் நேற்று திறக்கப்பட்டன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 மாதமாக வேலையின்றி தவித்த அவர்கள் நேற்று உற்சாகத்துடன் வேலைக்குச் சென்றனர்.

இதுபற்றி பட்டாசு ஆலை உரிமையாளர் குமார் கூறுகையில், ‘‘தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்படுவதால், பட்டாசு ஆலைகளை மீண்டும் திறந்துள்ளோம். பட்டாசு தொழில் பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று மீதமுள்ள ஆலைகளும் திறக்கப்படும்’’ என்றார்.

மேலும் சில
  • பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்



  • பாஜ கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தம்பிதுரை இப்போது பல்டி அடித்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்



  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக அலுவலகத்தில் மோடி படம்: தொண்டர்கள் அதிர்ச்சி



  • ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு



  • சென்டர் மீடியனில் மோதி பஸ்சில் பாய்ந்தது கார் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: மேல்மருவத்தூர் அருகே பரிதாபம்



  • மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு



  • அதிமுக எம்பி விபத்தில் பலி: திண்டிவனத்தில் பயங்கரம்



  • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை



  • தொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]