இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்

2/19/2019 3:03:22 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜிபுரம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (69). ஆடிட்டர். இவரது மனைவி ரஜிதா (60). இவர்கள் கடந்த ஆண்டு மே 22ம் தேதி படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த 7 பேர் கும்பல், கதவை உடைத்து, தம்பதியை கயிற்றால் கட்டி, பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள், விலை உயர்ந்த 2 செல்போன்கள், 2 வாட்சுகள், ஒரு லட்சம் மதிப்பிலான மூக்கு கண்ணாடி ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு, ரூ.8 லட்சம் மதிப்பிலான காரையும் எடுத்து கொண்டு தப்பினர். இதில், கார் மட்டும் ஊத்துக்கோட்டை அருகே ஏரிக்கரையில் மீட்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, மகாராஷ்டிர மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்த செல்லையா (40), சிவா (30), கோவிந்த் (30) ஆகியோரை அம்மாநில போலீசாரின் உதவியுடன் பிடித்தனர். அவர்களை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், நகை, பணத்தை அவர்களது கூட்டாளிகளிடம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது.

இதையடுத்து, சிறு திருட்டுகளில் ராம்பூர் கிளை சிறையில் இருந்த 4வது குற்றவாளியான சோம்நாத் மதுக்கர் சோப் (31) என்பவனை, போலீசார் காவலில் எடுத்து வந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, 5 நாள் காவலில் விசாரித்தனர். இதில் அவனிடம் கொள்ளை போன நகைகள் இல்லை என்பது தெரிந்தது. இந்நிலையில், இக்கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அதுகுறித்த விசாரணையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்து 9 மாதங்களுக்கு மேலாகியும், கொள்ளைபோன 200 சவரன் நகைகள் யாரிடம் உள்ளது என தெரியாமல், திருவள்ளூர் டவுன் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர்.

மேலும் சில
  • மீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்



  • கூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி



  • வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது



  • க.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை



  • 5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை



  • விஷம் குடித்த காதலி சாவு: சித்தப்பா முறை காதலனுக்கு தீவிர சிகிச்சை



  • கொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்



  • போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது



  • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]